ஜி 20 மாநாட்டை புறக்கணிக்கிறாரா சீன அதிபர் ஜின்பிங்?
இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டை சீன அதிபர் ஜின்பிங் புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் சிலகாலமாகவே பதற்றம் அதிகரித்து வருவதால் இரண்டு நாடுகளும் ஒன்றையொன்று தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்கா கலந்து கொள்ளும் ஜி 20 மாநாட்டை, சீன அதிபர் ஜின்பிங் புறக்கணிக்க இருப்பதாக வெளியான தகவலால் மேலும் பதற்றம் அதிகரித்து இருக்கிறது.
“ அமெரிக்க அதிபர் பைடனும் சீன அதிபர் ஜின்பிங்கும் என்ன தான் இருவருக்குள் ஏதும் இல்லை என்று பொதுவெளியில் காண்பித்து கொண்டாலும் கூட, இருவரும் நேராக மோதிடாமல் ஒருவருக்கொருவர் அமைதியான எதிரியாகவே இருந்து வருகிறார்களாம் “