அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் மூன்று லட்சத்தைக் கடந்தது!
தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் அமெரிக்காவில் மூன்று லட்சத்தை கடந்து சென்று கொண்டு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கை விடுத்து இருக்கிறது.
நேற்றைய தினத்தில் மட்டும் அமெரிக்காவில் கிட்ட தட்ட 3,15,617 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 768 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். உலக அளவில் கொரோனாவிற்கு மக்களை அதிகம் பலி கொடுத்த நாடாக அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
“ இதுவரை அமெரிக்காவில் கொரோனாவிற்கு 8,36,603 உயிர்கள் பலியாகி இருப்பதாக தெரிகிறது. இது பொய்யான தகவல் என்றும், இறப்புகள் அமெரிக்காவில் இதை விட பன்மடங்கு நிகழ்ந்திருப்பதாகவும் அந்நாட்டு மீடியாக்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன “