உலகளாவிய அளவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று, நான்காவது அலைக்கான அறிகுறியா?
உலகளாவிய அளவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது.
தென் கொரியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பெருமளவில் அதிகரித்து வருகிறது. அதிலும் தென் கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்து இருக்கிறது. இது நான்காவது அலைக்கான அறிகுறியாக எதிர்பார்க்கப்படுகிறது.
“ கொரோனாவை யாராலும் அடியோடு தகர்த்து விட முடியாது. அது உருமாறிக்கொண்டே தான் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கொரோனா குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறது “