சீனாவில் மீண்டும் அச்சுறுத்தும் புதிய ரக கொரோனோ வைரஸ்!
சீனாவில் மீண்டும் கொரோனோ பாதிப்புகள் கூடி வருவதாக சீனநாட்டின் மருத்துவ அமைச்சகம் கூறி வருகிறது.
சீனாவில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால், மங்கோலிய நாட்டினர் மூலம் இறக்குமதி செய்து வருகின்றனர். இந்த இறக்குமதியில் ஈடுபட்ட மங்கோலிய நாட்டினர் மூலம் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் புதிய ரக கொரோனோ வைரஸ் உருவெடுத்து பெருகி வருவதாக அந்நாட்டி அமைச்சகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து இரண்டு வாரங்களாக சீனாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனோ தொற்றால் மீண்டுக் பள்ளிகள், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. மாகாணங்களுக்கு நகர்வதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
“ இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தற்போது தான் கொரோனோ சூழலில் இருந்து மீண்டு வருகிறது, ஆனால் தற்போது சீனாவில் பெருக்கெடுத்து வரும் புதிய ரக கொரோனோ வைரஸ்சும், அங்கு நிலவும் சூழலும், உலகநாடுகளுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்துவதாய் உள்ளது. ”