அமெரிக்காவில் கிட்ட தட்ட 8 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனோ தொற்று!
அமெரிக்காவில் கொரோனோவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 8 லட்சத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
அமெரிக்காவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் வெறும் நான்கு சதவிகிதமே கொண்டது. ஆனால் உலகளாவிய ஒட்டு மொத்த கொரோனோ உயிரிழப்புகளில் அமெரிக்கா 15 சதவிகிதத்தை தன் வசம் வைத்து இருக்கிறது. அதாவது கொரோனோ பேரிடம் அமெரிக்காவில் கிட்ட தட்ட 8 லட்சம் பேரை காவு வாங்கி இருக்கிறது.
“ இன்னமும் அமெரிக்கா கொரோனோவினால் தொடர் உயிரிழப்புகளை சந்தித்து தான் வருகிறது. அது மட்டுமில்லாமல் அங்கு தற்போது சிறுவர்களுக்கும் தொற்று வேகமாக பரவி வருவதால், பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு கோவிட் பாஸ்சை கட்டாயப்படுத்தி இருக்கிறது அமெரிக்க அரசு “