ஆப்பிள் நிறுவனத்தை தமிழ் மீம் டெம்ப்ளேட் போட்டு கலாய்த்த எலான் மஸ்க்!
பிரபல ஆப்பிள் நிறுவனத்தை, தமிழ் பட மீம் டெம்ப்ளேட் ஒன்றை போட்டு கலாய்த்த எலான் மஸ்க்கின் ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல ஆப்பிள் நிறுவனம், ஐபோன் மூலம் வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை திருடி, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுடன் பகிர்ந்து வருவதாக, ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தில் தலைமையான எலான் மஸ்க் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய அந்த குற்றச்சாட்டை கன்டன்ட் ஆக்கி, அந்த கன்டன்ட்டை தமிழ் பட டெம்ப்ளேட் ஒன்றுடன் மீம் ஆக்கி அதை தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்தும் இருக்கிறார்.
” இந்த மீம் தற்போது இணையமெங்கும் வைரலாகவே தமிழ் சினிமா ரசிகர்களும் எலான் மஸ்க்கின் இந்த பதிவை ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர் “