பிரபஞ்ச அழகி போட்டியில், இஸ்லாமிய நாட்டில் இருந்து பங்கேற்க இருக்கும் முதல் போட்டியாளர்!
பிரபஞ்ச அழகி போட்டியில் இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் இருந்து முதன்முறையாக ஒரு பெண் போட்டியாளர் பங்கேற்க இருக்கிறார்.
இஸ்லாமிய நாடுகளில் பெரும்பாலும் அழகி போட்டி போன்றவற்றில் பங்கேற்க தங்கள் நாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் சவூதி அரேபியா முதன் முறையாக தடைகளை எல்லாம் கடந்து தங்கள் நாட்டு பெண்ணான ரூமி அல்ஹத்தானி என்பவரை பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க வைக்க முன்வந்துள்ளது.
முகம்மது பின் சல்மான் அதிகாரத்திற்கு வந்த பிறகு, சவூதியில் பல்வேறு சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அவரது சீர்திருத்தங்கள் பல்வேறு இஸ்லாமிய நாடுகளிடைய வியப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. முக்கியமாக பெண்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
“ பொதுவாக இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கென்று தனிக்கட்டுப்பாடுகள் இருக்கும், அது அவர்களின் சுதந்திர உணர்வுகளை பாதிப்பதாக உணரும் பட்சத்தில் சவூதி அரசு இப்படிப்பட்ட முன்னெடுப்புகளை எடுத்திருப்பது பாராட்டிற்குரியது என சமூக ஆரவலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “