உலகில் ஒவ்வொரு 11 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறாள், ஐநா பொது செயலர் வேதனை!
உலகில் ஒவ்வொரு 11 நிமிடத்திற்கும் ஒரு பெண்ணோ, சிறுமியோ கொல்லப்படுவதாக ஐநா பொது செயலர் கவலை தெரிவித்து இருக்கிறார்.
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் வரும் நவம்பர் 25 அன்று கடைப்பிடிக்க இருக்கிறது. இந்த நிலையில், ஐநா பொது செயலர் அன்டோனியா குட்டெரஸ் உலகில் ஒவ்வொரு 11 நிமிடத்திற்கும் ஒரு பெண்ணோ அல்லது சிறுமியோ வன்முறைத் தனத்தால் கொல்லப்படுகிறாள் என்று வேதனை தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பவர்கள் அந்த பெண்ணை சுற்றி இருந்து கொண்டு பாதுகாப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிகர தகவல். அவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவோ, இல்லை அந்த பெண்ணின் காதலனாகவோ இருப்பது தான் மிகவும் வேதனைக்குரியது.
“ காக்க வேண்டிய கைகளே கொலை செய்கிறது. நிச்சயம் இது குறித்த விழிப்புணர்வு உலகம் முழுக்க சென்றடைய வேண்டும். வரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறைந்திடல் வேண்டும் “