மாலத்தீவுக்கு தப்பி ஓடிய கோத்த பய ராஜபக்ஷே, அங்கும் விரட்டப்படும் அவலம்!
Gotabaya Rajapaksa Escaped To Maala Theevu
இலங்கை அதிபர் கோத்த பய ராஜபக்ஷே இலங்கையில் இருந்து விரட்டப்பட்ட நிலையில் மாலத்தீவுக்கு சென்று குடியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இலங்கை அதிபர் மாளிகையை மக்கள் சூழ்ந்ததால் தப்பி ஓடிய அதிபர் கோத்த பய ராஜபக்ஷே மாலத்தீவுக்கு சென்று குடியேறியதாக தெரிகிறது. அங்கு உள்ள மக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அவரின் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள் எதிர்ப்பலைகளை காண்பிப்பதாகவும் தெரிகிறது.
“ இலங்கையில் நிலவும் இந்த அசாதாரண சூழல் என்று மாறும் என்று தெரியாமல், மக்களும் அரசாங்க அதிகாரிகளும் விழி பிதுங்கி தவித்து வருகின்றனர் “