இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால், இஸ்லாமிய நாடுகள் ஒன்று கூடுவோம் – ஈரான் அதிபர்
இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால், இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்று கூடுவோம் என ஈரான் அதிபர் எச்சரித்து இருக்கிறார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் படையினர் இடையே 11 ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தனது முப்படைகளையும் வைத்து காஸாவின் மீது தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில் ஈரான் அதிபர் அயதுல்லா காமேனி, இஸ்ரேல், காஸா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒன்று கூடுவோம் என எச்சரித்து இருக்கிறார்.
ஹமாஸ் தாக்குதலால் கிட்ட தட்ட 1,300 இஸ்ரேலியர்கள் பலியாகி இருப்பதாகவும், இஸ்ரேலியர்களின் தாக்குதலால் கிட்டதட்ட 2,800 பாலஸ்தீனியர்கள் பலியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இரு பக்கமும் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
“ இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் ஒன்று கூடுவதாலும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்று கூடுவதாலும் உலகப்போர் நிகழ வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன “