உலகிலேயே அதிக கொரோனா பலிகளை சந்தித்தது இந்தியா தான் – உலக சுகாதார அமைப்பு
India Has The Highest Number Of Covid Deaths WHO
உலகிலேயே அதிக கொரோனா பலி எண்ணிக்கையை சந்திந்தது இந்தியா தான் என்று உலக சுகாதாரத்துறை அமைப்பு ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
இந்திய அரசு, தேசத்தின் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5.50 லட்சமாக காண்பித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்போ இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேல் கொரோனா இறப்புகள் இருக்க கூடும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஒன்றிய அரசை அதிர்வடைய செய்து இருக்கிறது.
“ இதில் யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்று தெரியாத நிலையில் மக்களும் இவர்களுக்கிடையில் விழி பிதுங்கி நிற்கின்றனர் “