உலகளாவிய ஊழல் குறியீட்டில் இந்தியா ஒரு இடம் முன்னேற்றம்!
உலகளாவிய ஊழல் குறியீட்டில் இந்தியா போன வருடத்தை காட்டிலும் ஒரு இடம் முன்னேறி இருப்பதாக ஜெர்மனியின் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் நிறுவனம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
ஜெர்மனியின் பெர்லினை தலைமையிடமாக கொண்டு விளங்கும் ‘ட்ரான்ஸ்ன்பேரன்சி நிறுவனம்’ வெளியிட்ட ஊழல் குறியீட்டு பட்டியலில் நூற்றுக்கு நாற்பது மதிப்பெண்கள் எடுத்து, இந்தியா போன வருடத்தைக் காட்டிலும் ஒரு இடம் முன்னேறி 85 ஆவது இடத்தை பிடித்து இருப்பதாக தெரிகிறது.
180 நாடுகளில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் நமது அண்டை நாடான பாகிஸ்தான் மிகவும் பின் தங்கி 28 மதிப்பெண்களுடன் 140 ஆவது இடத்தை பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
“ மதிப்பெண் 0 என்பது ஊழலில் திளைத்த நாடாக கொள்ளப்படும். மதிப்பெண் 100 என்பது ஊழலற்ற நாடாக கருதப்படும். அந்த வகையில் ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, லக்சம்பர்க், ஜெர்மனி போன்ற நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் இருக்கின்றன “