தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்றும் வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர், பசி பட்டினியில் மக்கள்!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் ஆன போர் தொடர்ந்து ஏழாவது நாளாக நீடித்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் தொடர்ந்து ஏழாவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நிகழ்த்தி வருவதால் அங்கு வசித்த 1 மில்லியனுக்கும் மேலான மக்கள் வேறு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பசி பட்டினியில் குழந்தைகள் தொடர்ந்து மயக்கமுற்று வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஐநா உறுப்பினர்கள் சிலரும் போரில் கொல்லப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. அது இஸ்ரேலின் தாக்குதலில் தான் நிகழ்த்தப்பட்டது என்றாலும் கூட, இஸ்ரேல் அதை மறுத்து வருகிறதாம். பல உண்மைகள் இந்த போரில் மறைக்கப்பட்டு வருவதாக உலக மீடியாக்கள் கூறி வருகின்றன.
“ ஒரு பக்கம் ரஷ்யா – உக்ரைன் போர், இன்னொரு பக்கம் இஸ்ரேல் – பாலஸ்தீன போர், என்று உலகின் வெவ்வேறு பகுதிகளில் இரு வேறு போர்கள் நீடித்து வருகிறது. ஏராளக்கணக்கான அப்பாவி மக்களும் குழந்தைகளும் இதற்கு பலியாகி வருவதால் உலகநாடுகள் தொடர்ந்து கண்டனங்கள் எழுப்பி வருகின்றன “