தொடர்ந்து ஜப்பானை வதைக்கும் அடுத்தடுத்த நிலநடுக்க அதிர்வுகள்!
Japan Facing Major Earth Quake Again And Again 09 01 24 Idamporul
அடுத்தடுத்த நிலநடுக்க அதிர்வுகள் தொடர்ந்து ஜப்பான் நாட்டையே உலுக்கி வருகிறது.
அடுத்தடுத்து பதிவாகும் நிலநடுக்க அதிர்வுகள் ஜப்பான் நாட்டையே நிலைகுலைய வைத்து இருக்கிறது. இன்று ஹோன்சு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி இருக்கிறது. இதுவரை நிலநடுக்கத்திற்கு 161 பேர் பலியாகி இருக்கின்றனர். கிட்ட தட்ட 100 பேரின் நிலைமை என்னவென்றே தெரியாத நிலையும் நீடிக்கிறது.
” அடுத்தடுத்து நீடிக்கும் நிலநடுக்க அதிர்வுகளால் மீட்பு பணிகளும் வெகுவாக தொய்வடைந்து இருக்கிறது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என்றாலும் கூட மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கி இருக்கிறது “