சீனாவில் புதிய வைரஸ் ரிலீஸ், பேரு கூட வச்சாச்சு ’லங்யா’!
சினாவில் புதிய ரக வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்குறது.
சீனாவில் லங்யா எனப்படும் புதிய ரக வைரஸ் தொற்று ஒன்று கண்டறியப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை சீனாவில் 35 பேருக்கு லங்யா எனப்படும் புதிய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டு வருகிறது.
கொரோனாவிற்கு வந்த அதெ சளி, இருமல், அசதி போன்ற அறிகுறிகள் தான் இதற்கும் சொல்லப்படுகிறது. எலி, ஆடு போன்ற விலங்குகளிலுருந்து மனிதருக்கும் பரவுவதாகவும் கூடுதல் தகவல்.
“ புதுசு புதுசா புதுப்படம் மாதிரி ரிலீஸ் பண்ணுறாங்கப்பா, கோவிட்க்கே பொருளாதாரத்தின் குறுக்கெலும்பு உடைஞ்சு போச்சின்னு சொல்லுறாங்க, இதுக்கு எந்த எலும்பு உடைய போகுதோ தெரியவில்லை “