மாலத்தீவு அதிபரின் வீண் ஈகோவால் பலியான 14 வயது சிறுவன்!
மாலத்தீவு அதிபரின் வீணான ஈகோவால் அங்கு 14 வயது சிறுவன் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மாலத்தீவு அதிபராக முகமது முய்சு நியமிக்கப்பட்டதில் இருந்தே, இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே பெரும் விரிசல் நிலவி வருகிறது. தொடர்ந்து மாலத்தீவு அமைச்சகம் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இது போக மாலத்தீவில் இருக்கும் 88 இந்திய படைவீரர்களையும் திரும்ப பெற கோரி மாலத்தீவு அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.
மாலத்தீவில் மருத்துவ மற்றும் இதர பயன்பாட்டிற்காக இந்திய அரசு டிரோனியர் ரக விமானத்தை வழங்கி இருந்தது. இந்த நிலையில் கபி அலீப் என்ற 14 வயது சிறுவனுக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்காக விமானம் தேவைப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இந்திய விமானத்தை அங்கு இயக்க அதிபரின் உத்தரவு மறுக்கப்பட்டதால் 16 மணி நேரம் கழித்து மருத்துவமனை சென்ற அந்த சிறுவன் சிகிச்சை பலனின்று உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ அதிபர் முகமது முய்சுவின் வீண் ஈகோவால் 14 வயது சிறுவன் ஒருவர் மாலத்தீவீல் உயிரிழந்து இருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது “