குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைத்தது உலக சுகாதார அமைப்பு!
குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயரை அமல்படுத்தி இருக்கிறது உலக சுகாதார அமைப்பு.
குரங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவ கூடிய நோயாக கருதப்படும் குரங்கு அம்மை நோயின் பெயரை எம்-அம்மை என்று பெயர் மாற்றம் செய்து இருக்கிறது உலக சுகாதார அமைப்பு. குரங்கு அம்மை என்ற பெயர் கருப்பினத்தவர்களை இழிவு படுத்தும் வகையில் இருப்பதாலே இந்த பெயர் மாற்றம் எனவும் அறிவித்து இருக்கிறது.
“ வெகுவிரைவில் உலக நாடுகள் குரங்கு அம்மை என்ற பெயரை விடுத்து எம்-அம்மை என்ற பெயரை பயன்படுத்திடவும் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்து இருக்கிறது “