உக்ரைனில், ரஷ்ய படையினரால் 3,500 ராணுவ தளவாடங்கள் அழிப்பு!
Russia Ukraine War Conflicts
உக்ரைன் – ரஷ்யா போரில் வான்வெளி தாக்குதல்கள் மூலம் உக்ரைன் அரசின் 3,500 ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் உச்சகட்ட நிலையை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் வான்வெளி தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் 3,500-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
” நேற்று முன் தினம் நடந்த ஏவுகணை தாக்குதல்களில் 35 பேர் பலியாகி இருந்ததாக அறிவித்து இருந்த நிலையில் இன்று அந்த பலி எண்ணிக்கை 40-ஆக அதிகரித்து இருக்கிறது “