நெதர்லாந்து நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பு – பிரதமர் மார்க் ரூட்டே
ஒமிக்ரான் பரவல் உச்சத்தில் இருப்பதன் காரணமாக நெதர்லாந்து நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா உருமாறி உருமாறி உலக நாடுகளைப் பாடாய் படுத்தி வரும் இந்த வேளையில், ஒமிக்ரான் உருமாற்றம் மீண்டும் உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டில் ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்ப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்து இருக்கிறார்.
“ ஒமிக்ரான் பரவலை எதிர்கொள்ள உலகநாடுகள் ஆங்காங்கே பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வரும் வேளையில் நெதர்லாந்து நாடு மட்டும் மீண்டும் ஊரடங்கை பிறப்பித்து இருக்கிறது “