அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எச்சரிக்கும் விதமாக, மீண்டும் ஏவுகணை சோதனையை நிகழ்த்திய வடகொரியா!
அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் கூட்டுப்பயிற்சியை எச்சரிக்கும் விதமாக, மீண்டும் ஏவுகணை சோதனையை நிகழ்த்தி காட்டி இருக்கிறது வடகொரியா.
அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து அடிக்கடி ராணுவ கூட்டுப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை கடுமையாக எதிர்க்கும் வகையிலும், எச்சரிக்கும் வகையிலும் இந்த கூட்டுப்பயிற்சிகள் நடக்கும் போதெல்லாம் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை பரிசோதித்து வருகிறது வடகொரியா.
” ஒரு ஏவுகணையில் ஒரு நாட்டையே அழிக்கும் சக்தி எங்களிடம் இருக்கிறது என்பதை அமெரிக்காவும் வடகொரியாவும் உணர வேண்டும் என்பதற்காகவே இந்த சோதனைகள் என வடகொரிய அதிபர் கிம் சொல்லாமல் சொல்லிக் காட்டுவதாக ஊடகங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றன “