அமெரிக்காவில் இரண்டு லட்சத்தை நெருங்கும் தினசரி ஒமிக்ரான் பாதிப்பு!
அமெரிக்காவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,90,000 பேருக்கும் அதிகமாக ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவில் ஒமிக்ரான் தொற்றின் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவரின் எண்ணிக்கை கிட்ட தட்ட 5 மடங்காக அதிகரித்து இருக்கிறது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானோர்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
“ அமெரிக்காவில் டெல்டா வகையை விட ஒமிக்ரான் பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. ஆனால் பாதிக்கும் அளவைப் பொறுத்தவரை டெல்டாவை விட ஒமிக்ரான் ஏற்படுத்தும் பாதிப்பு குறைவாகவே இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “