இஸ்ரேல் மீது 7000 ராக்கெட்டுக்களை சரமாரி வீசிய பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு!
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் என்ற இஸ்லாமிய அமைப்பு, இஸ்ரேல் மீது 7000 ராக்கெட்டுக்களை சரமாரி வீசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் என்ற இஸ்லாமிய அமைப்பு, இஸ்ரேல் மீது தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு 7000 ராக்கெட்டுக்களை சரமாரி வீசி தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமுற்று இருக்கின்றனராம். பலி எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இதனால் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் பதற்றம் உருவாகி இருக்கிறது.
“ ஹமாஸ் அமைப்பினர் ஒரு குழுவாக இஸ்ரேலுக்குள் புகுந்து, இஸ்ரேலின் ஆயுத கிட்டங்கிகளை கைப்பற்றி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஹமாஸ் படைகளுக்கு எதிராக இஸ்ரேலின் படைகளும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உத்தரவின் பேரால் போருக்கு ஆயத்தம் ஆகி இருக்கிறதாம் “