தொடர்ந்து இரண்டாவது வருடமாக சீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்!
தொடர்ந்து இரண்டாவது வருடமாக சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த வருடமே சீனாவில், பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்தும் இருந்தது. இதனால் உலகளாவிய மக்கள் தொகையில் தனது முதல் இடத்தையும் சீனா இழந்து இருந்தது. தற்போது மீண்டும் தொடர்ந்து இரண்டாவது வருடமாக சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்து இருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் என்னவென்று அலசி ஆராய்ந்த போது கடந்த 2016 ஆம் ஆண்டு சீனா ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்பதை சட்டமாக்கி இருந்தது. இதனால் அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து சீனாவின் மக்கள் தொகை வெகுவாக சரியவே, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சீன அரசு அந்த சட்டத்தை தளர்த்தியது.
” ஆனால் அந்த சட்டம் மற்றும் கொரோனோ செய்த ஆகப்பெரும் பாதிப்பு ஆகியவற்றால் சீனாவில் மக்கள் தொகை மீள முடியாத அளவிற்கு சரிந்து வருகிறது, எதிர்காலத்தில் சீனா இதனால் பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது “