ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டார் புதின்!
Russia Preseidential Election Putin 5th Time Selected As President Idamporul
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டார் விளாடிமிர் புதின்.
ரஷ்ய அதிபர் தேர்தலில் கிட்டதட்ட 88 சதவிகிதம் வாக்குகள் பெற்று மீண்டும் விளாடிமிர் புதின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் புதின் ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். எதிர்த்து போட்டி இட்ட யாருமே 5 சதவிகிதம் கூட வாக்குகள் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“ புதின் ஒரு புறம் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்க அவரின் வெற்றியில் சந்தேகம் கொண்டு மக்களில் ஒரு சில பகுதியினர் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் குதித்து இருக்கின்றனர் “