உக்ரைன் மீது ஏவுகணை மழை பொழிந்த ரஷ்யா, 34 பேர் படுகாயம்!
Russia Missile Attack On Ukraine Idamporul
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தியதில் பலர் படுகாயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் இன்னும் ஒரு முடிவை எட்டாத நிலையில் ரஷ்யா மீண்டும் உக்ரைனின் கிழக்கு பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தி இருக்கிறது. இதில் பல்வேறு வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் முப்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இந்த தாக்குதல்களில் இன்னும் இறப்பு குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை, உக்ரைன் தரப்பு இறப்பு குறித்த தகவல்களை வெளியிட மறுப்பதாக ரஷ்ய தரப்பு கூறி வருகிறது “