உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து போரை துவங்கி இருக்கிறது ரஷ்ய ராணுவம்!
Russia Officially Declares War Against Ukraine
ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது போரை துவங்கி இருப்பதாக நம்பத்தகுந்த ஊடகங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை துவங்கும் என்று கூறி இருந்த நிலையில், உக்ரைனின் பல பகுதிகளில் ராணுவ தாக்குதல்கள் துவங்கி விட்டதாக ஊடக வட்டாரங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
“ உக்ரைன் தலைநகர் கியூவின் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும், உக்ரைன் ராணுவத்தை அடிபணிய ரஷ்யா கோரிக்கை விடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது “