ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 35 உக்ரைனியர்கள் பலி!
Russian Missile Killed 35 Ukraine People
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் மக்கள் மற்றும் உக்ரைன் ராணுவ வீரர்கள் உட்பட 35 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் உச்சகட்ட நிலையை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் 35 உக்ரைனியர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
“ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அடிபணியாமல் உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து நிற்பதற்கும் ஒரு தீரம் வேண்டும். அதே சமயத்தில் ரஷ்யாவும் உக்ரைனை அடிபணிய வைக்காமல் போரை நிறுத்துவதாக தெரியவில்லை “