உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல், 25 பொதுமக்கள் பலி!
Russia Attack Ukraine Railway Station
உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் கிட்டதட்ட 25 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நேற்றுக்கு முந்தையநாள் உக்ரைன் தனது நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், அதை சீர்குலைக்கும் விதமாக ரஷ்யா உக்ரைனின் ரயில் நிலையப் பகுதிகளின் மீது ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தியது. இதில் 25 பொது மக்கள் பலியாகி இருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கின்றனர்.
“ ரஷ்யாவின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஐநா நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றன. ஐநாவில் இந்தியாவும் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்து இருப்பது குறிப்பிடத்தக்கது “