உண்மையில் ஜாம்பி வைரஸ்சை தோண்டி எடுத்தனரா ரஷ்ய விஞ்ஞானிகள்!
ரஷ்ய விஞ்ஞானிகள் இரண்டு தினங்களுக்கு முன்பு ஜாம்பி வைரஸ்சை தோண்டி எடுத்ததாக பரவி வந்த நிலையில் அது குறித்து சில உண்மை தகவல்கள் கசிந்து உள்ளன.
இரண்டு தினங்களுக்கு முன் ரஷ்ய விஞ்ஞானிகள் 48,500 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்சை கண்டு பிடித்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அது ஜாம்பி வைரஸ் என்று சமூகவலைதளங்களிலும், மீடியாக்களிலும் வேகமாக பரவி வந்த நிலையில் அது ஜாம்பி வைரஸ் இல்லை, சாதாரண வைரஸ் தான் ஆனால் பழமையானது என முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது ரஷ்ய ஊடகம்.
“ இருந்தாலும் அந்த வைரஸ் அப்சர்வேசனில் வைக்கப்பட்டு இருக்கிறதாம். அணு ஆயுதங்களை தொடர்ந்து அடுத்ததாக உலகப்போர்களில் வைரஸ்கள் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் இந்த செய்தி வெளியானதும் உலக நாடுகள் கொஞ்சம் பீதியில் இருக்கின்றன “