உக்ரைன்: ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால் 8 வயது சிறுவன் உட்பட 51 பேர் பலி!
Russian Air Strikers Kills 51 People In Ukraine Idamporul
ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால், உக்ரைனின் ஹ்ரோஷா பகுதியில் 8 வயது சிறுவன் உட்பட 51 பேர் பலியாகி இருக்கின்றனர்.
ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால், 8 வயது ஆன சிறுவன் உட்பட 51 பேர் உக்ரைனில் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கார்கிவ் நகரின் தென் கிழக்கு பகுதியில் இருக்கும் ஹ்ரோஷா என்னும் கிராமத்தில் தான் இந்த தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது. ராணுவ பகுதிகள் அல்லாத சிவில் இடத்தில் ரஷ்யா தாக்குதலை நிகழ்த்தி இருப்பதற்கு உலகநாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
“ இந்த தாக்குதலால் ஹ்ரோஷ் என்ற அந்த கிராமத்தில் 20 சதவிகிதம் மக்கள் இறந்து இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்து இருக்கிறார் “