மக்களை நகர அனுமதித்து விட்டு மக்களின் மேலேயே தாக்குதலையும் நடத்தும் ரஷ்ய ராணுவம்!
Russian Army Attacking Innocent People In UKraine
மக்களை பாதுகாப்பாக நகர அனுமதித்தும் விட்டு, அவர்களை நகர விடாமல் அவர்கள் மீது தாக்குதலையும் நடத்துவதாக ரஷ்ய ராணுவத்தின் மீது உக்ரைன் அதிபர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
போர் என்றால் படையும், படைத்தளபதிகளும் அதிகமாக பாதிக்கப்படுவதைக் காட்டிலும் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவர். அந்த வகையில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரிலும் அதுவே நிகழ்ந்து வருகிறது. ஒரு பக்கம் ரஷ்யா மக்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர அனுமதித்து விட்டு அவர்கள் மீது தாக்குதலும் நிகழ்த்தி வருகிறது.
“ உலகளாவிய அளவில் பெருமளவில் உக்ரைன் பிரச்சினை பேசப்பட்டு வந்தாலும், அந்த நாட்டிற்காக ரஷ்யாவை எதிர்த்து களத்தில் இறங்க எல்லா நாடுகளும் தயங்கவே செய்கின்றன “