இனி 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த முடியாது, எங்கு தெரியுமா?
16 வயதுக்கு உட்பட்டவர்கள் இனி சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது என ஒரு நாடு அதிரடியாக உத்தரவிட்டு இருக்கிறது.
குழந்தைகளின் மென்டல் ஹெல்த் பாதிக்கப்படுவதாலும், சமூக வலைதளங்களினால் குழந்தைகளின் எதிர்காலம் தடம் மாறுவதையும் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகவலைதளங்கள் உபயோகிக்க தடை விதித்து இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் அக்கவுண்டுகள் முடக்கப்படும் எனவும் அறிவித்து இருக்கிறது.
“ தற்போது புளோரிடா மாகாணத்தில் பாஸ் செய்யப்பட்டு இருக்கும் இந்த பில், வெகுவிரைவில் நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது “