இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டு நிற்கும் இலங்கை!
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினை காரணமாக, இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டு நிற்கிறது இலங்கை அரசு.
தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இலங்கை தனது அத்தியாவசிய தேவைகளுக்கே அல்லாடி வருகிறது. இந்த நிலையில் நாட்டின் எரிபொருள் தேவைக்காக இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை இந்தியாவிடம் 500 மில்லியன் டாலரை கடனாக கேட்டு நிற்கிறது.
இலங்கை பொதுவாக சுத்தீகரிக்கப்பட்ட எரி பொருள்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. தங்களது நாட்டின் எரிபொருள் தேவைக்காக மட்டும் சிலோன் பெட்ரோல் கார்பரேஷன், நாட்டின் முக்கிய வங்கிகளான சிலோன் வங்கி மற்றும் பீபீள்ஸ் வங்கியிடம் சுமார் 3.3 பில்லியன் டாலர்கள் கடன் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
“ இந்த கடன் ஒப்பந்தம் விரைவில் இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது “