ரூ 450-க்கு விற்கப்படும் பெட்ரோல், பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் இலங்கை மக்கள்!
பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதித்து வரும் இலங்கையில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருள்களின் விலை 500 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. இதற்கு பெட்ரோலும் விதி விலக்கல்ல. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை ரூபாய் 450 ஆக இருக்கிறது.
“ ஒரு கிலோ உளுந்து 1000 ரூபாய், ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய், ஒரு முட்டை 50 ரூபாய், ஒரு கிலோ தக்காளி 1000 ரூபாய் என்று விலையை கேட்டாலே நம்மையும் கதிகலங்க வைக்கிறது இந்த இலங்கையில் நிலைமை “