இலங்கையில் இணையும் போராட்ட கைகள், பதவி விலகுவாரா ராஜபக்சே!
பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கை, அடிப்படை தேவைகளுக்கே ஆட்டம் காண துவங்கி இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் போராட்டமும் அங்கு வலுத்து வருகிறது.
விலைவாசி உயர்வு, மக்களின் அடிப்படை தேவைகளுக்கே பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைமை, நிதி பற்றாக்குறை என்று இலங்கையை பொருளாதார நெருக்கடி சூழந்து வரும் இந்த நிலையில் ஒட்டு மொத்த அரசை பதவி விலகி கோரி இலங்கை முழுக்க போராட்ட கைகள் இணையத் துவங்கி இருக்கின்றன.
“ இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல், அரசும் சரி மக்களும் சரி விழி பிதுங்கி நிற்கின்றனர் “