ஆப்கனில் பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வி, 3 ஆம் வகுப்பு வரை படிக்க மட்டுமே அனுமதி!
ஆப்கனில் நடக்கும் தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் மூன்று வரை மட்டுமே படிக்க அனுமதி அளித்து பெண்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே உடற்பயிற்சி மையம், அழகு சாதன மையம், பார்க் உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே பயில பெண்களுக்கு அனுமதி கொடுத்து பெண்களின் கல்வி உரிமையையும் பறித்து இருக்கிறது தலிபான்களின் ஆப்கன் ஆட்சி.
தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு ஆப்கனின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்னுடைய கல்வி என்னுடைய உரிமை என முழக்கமிட்டு தலிபான்களுக்கு எதிராக வலுவான குரலை எழுப்பி வருகின்றனர் ஆப்கன் பெண்மனிகள்.
“ ஆப்கனில் தலிபான்கள் பொறுப்பேற்றதில் இருந்து பெண்களுக்கான ஒவ்வொரு உரிமையும் மறுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் அல்லாது இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது ஆப்கன் “