தன்பாலின திருமணச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது தாய்லாந்து நாடாளுமன்றம்!
தன்பாலின திருமணச்சட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்து இருக்கிறது தாய்லாந்து நாடாளுமன்றம்.
தன்பாலின திருமணச்சட்டத்திற்கான மசோதோ தாய்லாந்து நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கிற்காக முன்வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஒட்டு மொத்தமாக இருக்கும் தாய் நாடாளுமன்றத்தில் இருக்கும் 415 செல்லும் வாக்குகளில் 400 பேரின் வாக்குகள் பெற்று தன்பாலின திருமணச்சட்டத்திற்கான மசோதா அதிகாரப்பூர்வமாக நிறைவேறி இருக்கிறது.
மசோதா சட்டமாக வேண்டும் எனில் இன்னும் செனட் சபையும், தாய்லாந்து மன்னரும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இருவரும் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் திருமண சமத்துவத்தை நோக்கிய இந்த மசோதா தாய்லாந்து முழுக்க சட்டமாக அமல்படுத்தப்படும் என தாய்லாந்து அரசு கூறி இருக்கிறது.
“ இச்சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் சமுதாயத்தில் பாகுபாடு குறைந்து சமத்துவம் மேலோங்கும் என தாய் நாடாளுமன்ற தலைவர் கருத்து தெரிவித்து இருக்கிறார் “