உக்ரைன்-ரஷ்யா போரினால் உலகச் சந்தையில் உயர்ந்த கோதுமையின் விலை!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரினால் உலக சந்தையில் கோதுமையின் விலை உயர்ந்து இருக்கிறது.
உலகளாவிய அளவில் 25% கோதுமை, ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்தே ஏற்றுமதி ஆகிறது. ரஷ்யா – உக்ரைன் போரால் இந்த ஏற்றுமதி விகிதம் குறைந்து உலகளாவிய அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் மூலம் உலக சந்தையில் கோதுமையின் விலை டன்னுக்கு 25,000 ரூபாய் உயர்ந்து இருக்கிறது.
“ இந்த ஏற்றுமதி தட்டுப்பாட்டை இந்தியாவால் நிறைவு செய்ய முடிந்தால், உலக சந்தையில் இந்திய விவசாயிகளின் கோதுமை போய் சேரும். அவர்களுக்கு இந்த சூழல் லாபகரமானதாக அமையும் “