நியூசிலாந்தில் 3 நாட்களில் இரண்டு முறை நிலநடுக்கம்!
நியூசிலாந்தில் கடந்த 3 நாட்களில் இரண்டு முறை நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளதாக பேரிடர் ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது.
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மறுபடியும் 5.0 என்ற அளவில் அதே தீவு பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது.
“ மூன்று நாட்களுக்குள் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு இருப்பதால் அங்கிருக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர் “