நிலநடுக்கத்தால் 6 மீட்டர் அளவுக்கு நகர்ந்த துருக்கி!
நிலநடுக்கத்தால் துருக்கி 6 மீட்டர் அளவுக்கு நகர்ந்து இருப்பதாக பேரிடர் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 16,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிகிறது. இந்த நிலநடுக்கத்தின் பெரும் விளைவு மற்றும் தட்டுகளின் மோதல்களால் துருக்கி கிட்ட தட்ட 6 மீட்டர் அளவுக்கு நகர்ந்து இருப்பதாக பேரிடர் ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
“ மேலும் இது தொடரவும் வாய்ப்பு இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலி எண்ணிக்கையும் இன்னும் நான்கு மடங்கு உயர வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவருகிறது “