உலக வங்கியின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்!
Ajay Banga Elected As World Bank President Idamporul
அமெரிக்க வாழ் இந்தியர் உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்க வாழ் இந்தியர் மற்றும் தொழிலதிபராக அறியப்படும் அஜய் பங்கா உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். வரும் ஜூன் 2 அன்று பதவி ஏற்க இருக்கும் அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக வங்கியின் தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“ அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாத பட்சத்தில், போட்டியின்று அஜய் பங்கா தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக உலக வங்கி குழுமம் அறிவித்து இருக்கிறது “