உஸ்பெகிஸ்தானில் 18 சிறுவர்களை காவு வாங்கிய இந்திய தயாரிப்பு மருந்துகள்!
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு மருந்து உஸ்பெகிஸ்தானில் 18 சிறுவர்களை பலி கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிறுவர்களுக்கான சுவாச கோளாறு பிரச்சினைகளுக்காக இந்தியாவின் மரியான் பயோ டெக் நிறுவனம் ’Doc-1 Max syrup’ என்ற மருந்தை தயாரித்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இதை உட்கொண்ட உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 18 சிறுவர்கள் மருந்தின் பக்க விளைவால் பலியானதாக வெளியாகிய தகவல் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
இது குறித்து உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை மூலம் வந்த தகவலை ஆராய்ந்து இந்தியா சார்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் உண்மை புலப்படுமாயின் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உஸ்பெகிஸ்தானிடம் இந்தியா உறுதி கொடுத்து இருக்கிறது.
“ குழந்தைகளுக்கு சிரப் கொடுப்பதே ஆபத்து எனவும் பலரும் கூறி வந்தாலும் கூட சின்ன சின்ன உடல்நலக்குறைவிற்காக ஏதேனும் ஒரு சிரப்பை மருந்தகங்களில் வாங்கி சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு கொடுத்து வருகின்றனர் “