மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்குமா இந்த உக்ரைன் – ரஷ்யா மோதல்?
உக்ரைன் நாட்டினுள் புகுந்து ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருவதால் இந்த நிலை மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுத்துவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.
அமெரிக்கா, பிரான்ஸ், யுனைட்டடு கிங்டாம் உள்ளிட்ட 30 நாடுகள் குழுமமாக இருக்கும் ஒரு அமைப்பு தான் நாட்டோ (NATO). 2008 இல் இந்த அமைப்பிற்கு உக்ரைன் விண்ணப்பித்தது தான் இந்த பிரச்சினைக்கு மூலக்காரணம். ஒரு காலத்தில் சோவியத் யூனியனில், ரஷ்யாவுடன் இணைந்து இருந்த உக்ரைன் எங்கே நாட்டோ குழுமத்துடன் இணைந்து நம்மை எதிர்க்குமோ என்னும் உத்தேசம் தான் இந்த போருக்கு காரணம்.
நாட்டோ குழுமத்தில் இருக்கும் நாடுகளின் மீது பிற நாடுகள் தாக்க முற்பட்டால், குழுமத்தில் உள்ள பிற நாடுகள் அந்த நாட்டிற்கு கை கொடுக்கலாம். இந்த குழுமத்தில் உக்ரைன் இணைய முற்பட்டதாலேனோ ரஷ்யா-உக்ரைன் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து தற்போது போர் வரை சென்று இருக்கிறது.
” ஒரு பக்கம் ரஷ்யா இந்த விவகாரத்தில் பிற நாடுகள் தலையிட்டால் அவர்களுக்கும் இந்த நிலைமை தான் எச்சரித்து இருக்கிறது. ஒரு வேளை நாட்டோ நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டால் இந்த விவகாரம் மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது “