புதின் விரைவில் அவருக்கு நெருக்கமானவர்களாலேயே கொல்லப்படுவார் – செலன்ஸ்கி
Zelensky Ukraine President Idamporul
புதின் விரைவில் அவரது நெருக்கமானவர்களாலேயே கொல்லப்படுவார் என்று உக்ரைன் அதிபர் கூறி இருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
உக்ரைன் – ரஷ்யா போர் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்ய அதிபருக்கும் உக்ரைன் அதிபருக்கும் இடையே தற்போது வார்த்தை போர் நடைபெற்று கொண்டு இருக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் வெகுவிரைவில் அவரது நெருக்கமானவர்களாலேயே கொல்லப்படுவார் என்று செலன்ஸ்கி தற்போது கூறி இருப்பது அங்கு மேலும் பதட்டத்தை அதிகரித்து இருக்கிறது.
“ உக்ரைன் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் போரை தொடர்கிறது, ரஷ்யாவும் விட்டபாடில்லை என்பதால் இன்னும் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் என்றே உலகநாடுகள் கூறி வருகின்றன “