நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆடுஜீவிதம் படம் எப்படி இருக்கிறது?

Aadujeevitham Review In Tamil Idamporul

Aadujeevitham Review In Tamil Idamporul

நடிகர் பிரித்விராஜ் மற்றும் அமலாபால் இணைவில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

தேசிய விருது பெற்ற இயக்குநரான பிளெஸ்சி அவர்களின் இயக்கத்தில், நடிகர் பிரித்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மையக்கருத்து

நல்ல வேலை என்று நம்பி வளைகுடா நாடுகளுக்கு ஏமாந்து கஸ்டப்படும் ஒரு சாமானியனின் வலி நிறைந்த கதை தான் ஆடுஜீவிதம்

சரி, படம் எப்படி இருக்கிறது?

நஜூப் முகமதுவாக பிரித்விராஜ், அவரின் கர்ப்பிணி மனைவி ஷைனுவாக அமலாபால் ஏழ்மையின் பிடியில் இருக்கும் இந்த இஸ்லாமிய குடும்பம் ஆற்றில் உள்ள மணலை அள்ளி பிழைப்பு நடத்துகிறது. எப்படியாவது தன் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தி, நாளை பிறக்க போகும் தனது குழந்தைக்கு நல்ல கல்வியை கொடுக்க நினைக்கும் நஜூப் வெளிநாடு செல்ல முயற்சிக்கிறான். வாய்ப்பும் கிடைக்கிறது. அலுவலக பணி என்று கூறி அழைத்துச் செல்லப்படும் நஜூப், அங்கு சுட்டெரிக்கும் பாலைவனத்தில் ஆடுமேய்க்கும் பணியில் அமர்த்தப்படுகிறார்.

அடிமை வாழ்க்கை மற்றும் கொடூரமான அந்த துன்புறுத்துதலுக்கு மத்தியில் நஜூப் என்னும் இளைஞன் என்ன ஆகிறான் அவன் எப்படி மீள்கிறான் என்பது தான் மீதிக் கதைக்களம். படத்தின் ஆகச்சிறந்த வெற்றி என்பது மிகைப்படுத்தப்படாத இயல்பு என்றே சொல்லலாம். ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு என அனைத்தும் படத்தில் நேர்த்தியாக இருந்தது. படத்திற்காக பிரித்விராஜ் நிறையவே உழைத்து இருக்கிறார் என்பது படத்தின் வெவ்வெறு காலக்கட்டங்களில் அவர் காண்பிக்கும் உடல் மாறுபாடுகளிலேயே தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மானின் பின்னனி இசை படத்தின் ஆழமான காட்சிகளுக்கு அடித்தளமாக அமைகிறது. நிச்சயம் பல விருதுகளை படம் வாங்கி குவிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஒரே ஒரு எதிர்மறை கருத்து சொல்ல வேண்டுமானால், இயக்குநர் படத்திற்கு இன்னமுமே அழுத்தம் சேர்த்து இருக்கலாம்.

” மலையாள சினிமாக்கள் தொடர்ந்து நல்ல கதைக்களத்தை ரசிகர்களுக்கு படைத்து வருகின்றன. அந்த வகையில் ஆடுஜீவிதம் ஒரு அல்டிமேட் கதைக்களம், திரையில் ஆடுஜீவிதம் காண்பித்த வலியை இதயத்தில் உணர முடிகிறது அதுவே அப்படத்தின் வெற்றி “

ஆடுஜீவிதம் இடம்பொருள் மதிப்பீடு:

Rating: 4 out of 5.

About Author