Maaran Review | ‘முழுக்க முழுக்க கணிக்க கூடிய கதைக்களமாகவே நகர்கிறது மாறன்‘
Actor Dhanush In Maaran Movie Review
தனுஷ் மற்றும் இயக்குநர் கார்த்திக் நரேன் இணைவில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படம் இன்று வலை தளத்தில் வெளியாகி இருக்கிறது.
திரில்லர், கமெர்சியல், சென்டிமென்ட் என்று எதை எடுப்பது என்று தெரியாமல் மூன்றையும் கலந்து மிக்ஸ்சியில் அரைத்து இருக்கிறார் கார்த்திக் நரேன். கொஞ்சம் சகோதரி சகோதரர் பாசத்தையும் ஊறுகாயாக தொட்டுக்கொள்ள வைத்து இருக்கிறார். முழுக்க முழுக்க கணிக்க கூடிய கதைக்களமாகவே நகர்கிறது மாறன்.
“ படக்குழுவினர் படத்தை முடித்துவிட்டு திரையில் போட்டு பார்த்து இருப்பார்கள் போல, அதன் காரணமாகவே உஷார் ஆகி வலைதள நிறுவனத்திடம் விற்று போட்ட காசையாவது எடுத்து இருப்பார்கள் “