நடிகர் விஜய் ஆண்டனியின் ’ரத்தம்’ திரைப்படம் எப்படி இருக்கிறது?
நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சி எஸ் அமுதன் இணைவில் வெளியாகி இருக்கும் ‘ரத்தம்’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
படத்தின் துவக்கத்திலேயே ஒரு மீடியாவை சேர்ந்தவர் கொல்லப்படுகிறார். அதே பாணியில் தொடர்ந்து சில கொலைகள் அரங்கேறுகிறது. இன்வெஸ்டிகேசன் ஜார்னலிஸ்ட் ஆன விஜய் ஆண்டனி ஒரு சில காரணங்களுக்காக பணியை விட்டு விட்டு கொல்கத்தாவில் அமைதி வாழ்க்கை வாழ்கிறார். மீண்டும் அவருக்கு பணி புரிய வரும் வாய்ப்பு, அதை விஜய் ஆண்டனி ஏற்றுக் கொண்டாரா? அதற்கு பின் என்ன நடந்தது என்ன? நடக்கும் கொலைக்கான பின்னணிகளை அவர் கண்டு பிடித்தாரா? என்பது தான் மீதிக்கதை.
ரஞ்சித் குமார் ஆக விஜய் ஆண்டனியின் நடிப்பு அருமை. ஒரு சில இன்வெஸ்டிகேசன் சீன்களும் நன்றாகவே இருந்தது. ஒரு அருமையான கதையை தான் சி எஸ் அமுதன் எழுதி இருக்கிறார். ஆனால் படத்தில் எண்ண முடியாத அளவிற்கு நிறைய லாஜிக் விதி மீறல்கள் இருந்தது. இன்னமும் கொஞ்சம் யோசித்து சீன்களை எல்லாம் மெருகேற்றி இருந்தால் இன்னுமே நல்ல படமாக வந்து இருக்கும்.
“ ஸ்பூஃப் படங்களுக்கு பெயர் போன சி எஸ் அமுதனுக்கு இப்படியும் கதை அமைக்க தெரியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். என்ன அவர் எழுத்துக்கு சீன்கள் கொஞ்சம் சப்போர்ட் செய்யவில்லை, இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து நிறையவே சீன்களை மெருகேற்றி இருக்கலாம். அவ்வளவு தான் “