டாணாக்காரன் ரிவ்யூ | ‘அழுத்தமான கதைக்களம், சமரசம் செய்யப்படாத திரைக்கதை’
Taanakkaran Movie Tamil Review
அறிமுக இயக்குநர் தமிழ் மற்றும் விக்ரம் பிரபு இணையும் ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருந்தது. ஓரளவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையே பெற்று இருக்கிறது.
காவல் துறை கனவுகளோடு பயணிக்கும் ஒரு சிலர் அவர்களது ட்ரெயினிங் காலங்களில் என்ன என்ன அழுத்தங்களை சந்திக்கிறார்கள் என்பதே கதைக்களம். அதை அசாத்தியமாக அப்படியே எடுத்து கண் முன் காட்டி இருக்கிறார் இயக்குநர். விக்ரம் பிரபு, எம் எஸ் பாஸ்கர், லால் என்று அனைவரும் நடிப்பில் மிரட்டி இருக்கின்றனர்.
“ ஆக மொத்தம் அழுத்தமான கதைக்களம், சமரசம் செய்யப்படாத திரைக்கதை, மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, நடிகர்கள் தேர்வு என்று ஒட்டு மொத்தமாக யாவினிலும் வென்று இருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழ் “
டாணாக்காரன் இடம் பொருள் ரேட்டிங் – 3.75/5 (Simply ‘Tanaakkaran’ Is Absolute Master Piece From Debutant Director Tamizh )