KGF Chapter 2 | Review | ‘நிச்சயம் இந்த குதிரை உலகளாவிய அளவில் கூட பந்தயம் அடிக்கும்’
KGF Chapter 2 Review In Tamil
நடிகர் யாஷ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணைவில் உருவாகி இருக்கும் கே.ஜி.எப் 2 இன்று உலகளாவிய அளவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது.
கே.ஜி.எப் 1 கொடுத்த அழுத்தத்தினால், கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்திருந்தது. அந்த எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்வார்கள் என்று மனதில் ஓடிக்கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் தன் படத்தின் மூலம் பதில் தந்து இருக்கின்றனர். குறைகள் துளி என்றால் நிறைகள் கடல். நிச்சயம் இந்த குதிரை பந்தயம் அடிக்கும்.
நிச்சயம் ஒவ்வொரு ரசிகனுக்கும் சினிமா விருந்து, யாஷ் மாஸ்சாக நடித்துக் கொடுத்து இருக்கிறார். கதை, திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் பிரஷாந்த் நீல் அவர்களின் மிகப்பெரிய உழைப்பு தெரிகிறது. இசை கதையோடு ஒன்றுகிறது. ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரவீனா தந்தன், சஞ்சய் தத் சிறப்பாக நடித்துக் கொடுத்து இருக்கின்றனர்.
“ ஆக மொத்தம் இந்த குதிரை எந்த ரேஸ்சில், எங்கு ஓடவிட்டாலும், உலகளாவிய அளவிலும் கூட பந்தயம் அடிக்கும் “
KGF Chapter 2 | IdamPorul Rating : 4.25/5 | ‘Strong Screenplay, Perfect Directorial, Pakka BGM, Mass Yash, Over All World Class Movie’