வலிமை விமர்சனம் | ‘மின்னல் வேக திரைக்கதையில் சென்டிமென்ட் என்னும் ஸ்பீட் பிரேக்கர்’
கிட்ட தட்ட 3 வருடங்களின் எதிர்பார்ப்பிற்கு பிறகு இன்று வெளியாகி இருக்கிறது அஜித் குமார் – ஹெச்.வினோத் இணைவில் உருவான ‘வலிமை’.
சைத்தான் பைக் ரேசர்களுக்கும், ஒரு அதிகாரிக்கும் இடையில் நடக்கும் ஒரு இன்வெஸ்டிகேசனல் யுத்தம் தான் இந்த வலிமை. பின்னனி இசை, சேசிங் சீன்கள், ஒளிப்பதிவு, அஜித் குமார் அவர்களின் ஸ்கிரீன் பிரசன்ஸ் என்று யாவற்றிலும் ‘வலிமை’ கலக்கினாலும், படத்தின் நீளமும், உணர்ச்சிபூர்வமான சீன்களும் படத்தின் ரசனைக்கு ஸ்பீட் பிரேக்கர் போடுகிறது.
திரைக்கதையின் மையக்கதைக்குள் புகுந்த எமோசனல் டிராமாக்களால் வலிமை, சற்றே வலிமையிழந்து இருக்கிறது. முழு நீளக் கதையையும் மையக்கதையை வைத்து நிரப்பி படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்து இருந்தால் நிச்சயம் வலிமை பெற்று இருக்கும் ‘வலிமை’
“ மொத்தமாக கூறினால் ஆங்காங்கே லூப் ஹோல்கள், படத்தின் நீளம், உணர்ச்சி பூர்வமான பிரடிக்டடு சீன்கள் இதையெல்லாம் தவிர்த்து இருந்தால் ’வலிமை’ இன்னும் வலிமையாக இருந்து இருக்கும் “
Ratings | Fans – 3.5/5 | General Audience – 3/5 | Family Audience – 3.5/5 | Idam porul Team – 3/5